திருப்பூர் காங்கேயம் அருகே பாப்பினி பொன்னுசாமி விவசாய தோட்டத்தில் ஆடுகள் திருடப்பட்ட சம்பவத்தில், 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, சேலத்தைச் சார்ந்த ஐந்து இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட ஆடுகள் மற்றும் பொலிரோ பிக் அப் வாகனமும் கைப்பற்றப்பட்டது.