காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நவீன்குமார் கூறிய அடையாளங்களை கொண்டு, செல்போன், பணம் பறித்த ஆசாமி காங்கேயம் ஓலப்பாளையத்தை சேர்ந்த அன்பழகன்@ போலீஸ் அன்பு (25) என்பதும், இவர் காங்கேயம் போலீஸ் குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு உதவியாக போலீஸ் நண்பராக இருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் காங்கேயம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக இரவு நேரங்களில் தனியாக பைக்கில் வருபவர்களை மடக்கி போலீஸ் எனக் கூறி பணம் பறித்து வந்ததும், மளிகை கடைகளில் சோதனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் அன்புவை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு