அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியின் சக்கரம் ஏறியதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜோதிநாதனை அருகில் இருந்தவர்கள் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊதியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.