வீரக்குமாரசாமி கோயில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவில் குளத்தவர்கள் பங்கேற்றனர். அதன்படி திருவிழா பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது. 

அதன்பின்னர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர் கலசம் வைத்தல், 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளயபூஜை, 27ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேருக்கு சாமி எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு தேர் நிலை பெயர்த்தலும், 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 

மார்ச் மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்த்தல். தேர் திருவிழா முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி