காங்கேயம் டி.எஸ்.பி மாயவன் உத்தரவின்படி கார் பறிமுதல் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் கொள்ளை கும்பலை சேர்ந்த முத்தூர், விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோவை மாவட்டம், வெள்ளலூர், மதுக்கரை பகுதியை சேர்ந்த கலைராஜா, திருச்சி, முருகம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலகுமார் (26) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்