திருப்பூர்: திருமண நாளில் துயரம்.. இளைஞர் விபத்தில் பலி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தைச் சேர்ந்த சி.ஜெயபாரதி (27) தனது திருமண நாளில் வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தாா். திருமண செலவுக்காக கொடுத்த பணத்தை மனைவி குடும்பத்தினர் தராததால் ஏற்பட்ட சண்டையால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் சமாதானம் பேசிவிட்டு திரும்பும்போது, புதுப்பை தங்கமேடு அருகே அவரது கார் நிலைதடுமாறி தண்ணீர்தொட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயபாரதி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி