வெள்ளகோவில்: காட்டில் கிடந்த தம்பதியின் சடலம்

வெள்ளகோவில் வேலப்பன்நாயக்கன் வலசில் வசித்து வருபவர் வேலுச்சாமி, மனைவி சாமியாத்தாள் இவர்களுக்கு ஒரு மகள், மகன் வித்யாசாகர் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். 

மகன் திருமணம் முடிந்த பிறகு வேலுச்சாமி அடிக்கடி சாமியாத்தாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பச் சண்டை ஏற்பட்டு கோபமடைந்த வேலுச்சாமி மனைவியை பிரிந்து 2 மாதமாக சின்னதாராபுரம் அருகே வசித்து வந்தார். உறவினர்களிடம் கூறி சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் வேலுச்சாமியை குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

ஆடு மேய்க்க காட்டிற்கு தாய் சென்று உணவு அருந்த வீடு வரவில்லை என காட்டிற்கு சென்ற மகன் பார்த்தபோது தாய் தந்தை இருவரும் தலை, முகம் ஆகிய பகுதிகளில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த மகன் வெள்ளகோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை செய்தனர். 

சாமியாத்தாள் கழுத்தில் வெட்டு காயமும் இருவரின் வாயிலும் தென்னை மரத்திற்கு பயன்படுத்த கூடிய விஷம் செல்பாஸ் மாத்திரை வாயில் இருப்பதையும் சடலத்தின் அருகே கருக்கருவாலும் இருந்துள்ளது. பைக்கை 1 கிலோமீட்டர் முன் நிறுத்திவிட்டு வேலுச்சாமி சாமியாத்தாளை அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி