திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, திருப்பூரிலிருந்து கொடுவாய் வரை இயக்கப்படும் அரசு பேருந்து எண் 15ஏ-ன் மேற்கூரை, காற்றின் வேகத்தால் திடீரென கழன்று சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மேற்கூரை விழுந்ததில், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.