காங்கேயத்தில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பணி

காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, பாளையங்கோட்டை சாலை, முத்தூர் சாலை, வெள்ளகோவில் சாலை, தாராபுரம் சாலை, கோவை சாலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு நிலையை தீவிரப்படுத்தவும் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில் ஆங்காங்கே கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் காங்கேயம் காவல்துறையுடன் இணைந்து காங்கேயம் ஆட்டோ பைனான்ஸ் சங்கத்தினர் அதற்குரிய தொகையை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

கடந்த வாரம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தும் பணி அதிதீவிரமாக நடைபெற்று வந்தது. இப்பணியானது நேற்று முடிவடைந்த நிலையில் இன்று காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காங்கேயம் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் முன்னிலையில் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் உட்பட காங்கேயம் ஆட்டோ பைனான்ஸ் சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கேமராக்கள் பயன்பாட்டை துவக்கி வைத்தனர். இதனால் காங்கேயம் பகுதிகளில் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வாகன விபத்துக்கள் ஆகிய சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க இந்த கேமராக்கள் ஆனது பெரும் வகையில் உதவி செய்யும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி