திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன சன் நடராஜ், விடியல் சேகர், அதிமுக நகர செயலாளர் வெங்கு ஜி மணிமாறன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.