காங்கேயம்: பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் சிறை பிடிப்பு

திருப்பூரில் இருந்து காங்கேயம் வழியாக ஈரோட்டுக்கு தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று(அக்.04) திருப்பூரிலிருந்து ஈரோடு புறப்பட்டது. இதில் சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் ஒருவர் பயணம் செய்தார். அவர் திருப்பூரில் இருந்து காங்கேயம் வருவதற்கு டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டில் 01. 10. 2008 என பிரிண்ட் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நடத்துனரிடம் தெரிவித்தார்.

அந்த பேருந்து காங்கேயம் பேருந்து நிலையம் வந்தது. பேருந்தை சிறை பிடித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் காங்கேயம் காவல்துறையினர் அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹை கோர்ட் வக்கீல் கூறும்போது பஸ் நடத்துனர் பயணிகளும் கொடுத்த டிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு என இருப்பதாகவும், இவ்வாறு தவறாக டிக்கெட் கொடுத்தால் ஒருவேளை பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த பயணி இறந்து விட்டால் சட்டரீதியாக இழப்பீடு கோர முடியாது எனவும் அந்த பேருந்து மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்குவதாகவும், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதை அடுத்து சென்னை நீதிமன்ற வழக்கறிஞர் காங்கேயம் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து நிறுவனம் மீது புகார் அளித்தார். பின்னர் பேருந்து விடுவிக்கப்பட்டு பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. இதனால் சிறிது நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி