காங்கேயம் சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழாவில், பைனாப்பிள் கடை வைத்திருந்த முத்துக்குமார் என்பவருக்கும், அவரிடம் பணியாற்றிய கூலித்தொழிலாளி ராஜேஷ் என்பவருக்கும் இடையே பைனாப்பிள் விற்பனை தொகை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இந்த தகராறில் கைகலப்பு முற்றி, முத்துக்குமார் கத்தியால் ராஜேஷை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பொதுமக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.