திருப்பூர்: போலி டாக்டரை மடக்கி பிடித்த அதிகாரிகள்

வெள்ளகோவில் அருகே தாசவநாயக்கன்பட்டியில், முறையான மருத்துவ தகுதி இல்லாமல் அலோபதி சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் எஸ். மீரா தலைமையிலான குழுவினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள செல்லமுத்து (74) என்பவர், கிளினிக்கில் சிகிச்சை அளிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்தி