வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா நைனார் நாகேந்திரன் பங்கேற்பு

காங்கேயத்தை அடுத்த படியூரில் உள்ள ஜெய்ரூபா கல்வி நிறுவனத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பா. ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம். எல். ஏ. கலந்துகொண்டு, 'நாம் அனைவரும் தேசபக்தியுடன் இருப்பது போல், வந்தே மாதரம் பாடலுக்கான பெருமையை போற்றுவது நமது கடமை' என்று பேசினார். கல்வி நிறுவனத்தின் தாளாளரும், பா. ஜனதா திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளருமான கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் பா. ஜனதா மாநில பொதுச் செயலாளர் ஏ. பி. முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகன்பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி