காங்கேயத்தில் 7 வீடுகளில் முகமுடி கொள்ளையர்கள் அட்டூழியம்

காங்கேயம் தாராபுரம் சாலையில் கண்ணன்(54) கோவில் திருப்பணிகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீடு பாரதியார் நகரில் உள்ளது. நேற்று முன்தினம்(செப்.1) இவர் திருமணத்திற்கு சென்ற நிலையில் அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு 6 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து  26 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, பட்டுப்புடவை போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

இதே போல் திவ்யா (36) சக்திநகர் பகுதியில் வசித்தது வருகின்றார். இவர் பள்ளிக்கு கட்டவேண்டிய ரூ. 1 லட்சம் மற்றும் 1 பவுன் நகை கொள்ளை போனது. இதே போல் பாரதியார் நகரில் சாலமன், செல்வி ஆகியோர் வீடுகளிலும் சக்தி நகரில் நாட்ராயன், பிரபாவதி, திருநாவுக்கரசு ஆகியோர் வீடுகளிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் கொள்ளை போனதின் மதிப்பு தெரியவில்லை. அவர்கள் காங்கேயம் வந்தவுடன் தான் கொள்ளையின் மதிப்பு தெரிய வரும். கொள்ளை நடைபெற்றது குறித்து இரவே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரண்டு காவலர்கள் நேரில் வரவே கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு காவலர்களை நோக்கி கடப்பாரையை வீசி தப்பியோடியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  

மேலும் 3க்கும் மேற்பட்ட பேக்குகளை சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தை  காவல்துறையினர்  கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காங்கேயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி