வெள்ளக்கோவில் அருகே டாஸ்மாக் கடை முன்பு மதுபோதையில் மயங்கி கிடந்த உதகை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (56) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் மகளை பார்க்க வந்த அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை மதியம் காங்கயம் சாலையில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.