விழாவில் காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. கருணை பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் மதிய உணவு வழங்கினார்.
விழாவில் நத்தக்காடையூர் பகுதி தி. மு. க. நிர்வாகிகள், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை மு. பெ. மனோன்மணி நன்றி கூறினார்.