காங்கேயத்தில் நேற்று 23 மில்லி மீட்டர் மழைப்பொழிவு

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை வரை இடைவெளி விட்டு மழை பெய்தது. 5வது வார்டு புது விநாயகர் கோவில் பகுதியில், மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து கால்வாயில் வெள்ளம் போல் ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசியதுடன், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மழைநீர் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. காங்கேயத்தில் 23 மிமீ, வெள்ளகோவிலில் 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி