கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நாய்களால் பிரச்சனை ஏற்படும் என்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட பின் தற்போது மாவட்டம் முழுவதும் ஒரே ஒரு தனியார் அமைப்பின் உதவியுடன் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் நாய்களை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு நாய்களை பிடித்து கருத்தடை செய்த பின் மீண்டும் அதே இடத்தில் விடுவதால் நாய்களால் ஆடுகள் பலியாவது கட்டுப்படுத்த முடியமா என்ற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது. மேலும் நாய்கள் பிடிக்கப்படுவது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.