இது குறித்து வெள்ளகோயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நகை பறிப்பில் ஈடுபட்டவர் ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த சேட் ரூபைதீன் என்கிற சேட் பாய்(44) என தெரியவந்தது.
இதை அடுத்து நேற்று வெள்ளகோயில் காவல் ஆய்வாளர் ஞானபிரகாசம் தலைமையிலான தனிப்படையினர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த சேட் ரூபைதீனை கைது செய்தனர். இவர் அவ்வப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் திருட்டு நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் நேற்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.