சிவன்மலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை கொள்ளை

காங்கேயம் அருகே சிவன்மலை, சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் (53), ஜெயலட்சுமி (43) தம்பதியினர். இதில் செல்வராஜ் சிவன்மலையில் உள்ள படியூர் சர்வோதய சங்கத்திலும், ஜெயலட்சுமி படியூர் சர்வோதய சங்கத்திலும் வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். செல்வராஜின் தாய் சொர்ணாத்தாள் (70) வீட்டிலேயே இருந்தார். பின்னர், வேலை முடிந்து மாலை 6 மணியளவில் சொர்ணாத்தாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ. 57 ஆயிரம் மற்றும் அரை பவுன் தங்க தோடு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலறிந்து வந்த காங்கேயம் போலீசார், சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சிவன்மலை சரவணா நகர் பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியிலே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி