காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, வெள்ளகோவில் ஒன்றியம், வேலம்பாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல் ராமலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சொந்த நிதி பங்களிப்புடன் ரூ. 2.20 லட்சம் உதவியுடன் குடிநீர் மேல்நிலை தொட்டி பணிகளை அடிக்கல் நாட்டு விழா தொடங்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல் ராமலிங்கம் தலைமையில் துணை தலைவர் குப்புசாமி, வார்டு உறுப்பினர் கவிதா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் வேலம்பாளையம் ஊராட்சி ஊர் பொதுமக்கள், அஇஅதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.