திருப்பூர் மாவட்டம் காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நாளை புதன்கிழமை (4ஆம் தேதி) காங்கேயம் பஸ் நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின் வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.