காங்கேயம் அருகே வெள்ளகோவில் வள்ளியரச்சல் ஊராட்சி நல்லூர்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில், கடந்த சில வாரங்களாக நள்ளிரவில் சாயக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர். மேலும், பாறைக்குழியில் தேங்கியுள்ள சாயக்கழிவுகளை அகற்றி நீரையும் வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.