வெள்ளகோவிலில் காங்கிரஸ் கமிட்டி புனரமைப்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் காங்கிரஸ் கமிட்டியின் சங்கதன் ஸ்ரீதன் அபியான் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் குறித்த திருப்பூர் வடக்கு மாவட்ட அளவிலான கூட்டம் வெள்ளமடை தனியார் மஹாலில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட கிராமகாமிட்டி பொறுப்பாளர் கே. சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஹரியானா மாநில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சங்கதன் ஸ்ரீதன் அபியான் பொறுப்பாளருமான அசோக் தன்வர் சிறப்புரை ஆற்றினார். காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு மற்றும் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி