இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கான பயணிகள் ஆட்டோ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் வி. பி. மனோகரன் தலைமை தாங்கினார். முத்தூர் தி. மு. க. பேரூர் செயலாளர் செண்பகம் பாலு, வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியம், பேரூராட்சி கவுன்சிலர் மணிமேகலை விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். ஜான் வின் சென்ட் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் முத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் மு. க. அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு பயணிகள் ஆட்டோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் வசந்தம் மணி, பள்ளியின் ஆசிரியர்கள் கோகிலவாணி, ஜூலியட், சத்யா, ரெஜினா பேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வே. மனோகரன் நன்றி கூறினார்.