திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் ரோட்டில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு சாலை ஓரத்தில் வலுவிழந்த நிலையில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று பலத்த சூறாவளி காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் வேரோடு பகிர்ந்து சாலையில் விழுந்தது மேலும் இந்த மரம் உடைந்து அருகில் செல்லும் மின்கம்பியின் மீது உரசியபடி விழுந்ததால் மின்கம்பம் பாதியாக உடைந்து தொங்கியது இந்த நிலையில் இந்த மரம்முறைந்து விழுந்த போது அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்த இருவரின் இரண்டு கார்கள் மீது வேகமாக விழுந்தது இந்த மரம் முறிந்து விழுந்த நேரத்தில் இந்த இடத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் எவ்வித அசம்பாவித உயிரிழப்புகள் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை மேலும் மின்சார உடனடியாக துண்டிக்கப்பட்டதால் தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை இரண்டு கார்களும் சேதமடைந்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்