பேருந்தை இயக்க ஓட்டுனரும் பலமுறை முயற்சி செய்தார் ஆனால் பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டு போக்குவரத்து பணிமனைக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து மெக்கானிக்குகள் வந்த பின்னர் சுமார் 1 மணி நேரம் சரிசெய்ய முயன்றனர். பின்னர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உதவியுடன் பேருந்தை தள்ளியே ஸ்டார்ட் செய்ய முடிந்தது.
பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. [பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. ஈரோடு - பழனி சுமார் 120 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதில் இயக்கப்படும் பேருந்துகள் 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். மேலும் அதிக பயணிகள் பயணிக்கும் வழித்தடம் ஆகும். இதில் இயக்கப்படும் பேருந்துகள் சீரமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.