அதன்படி தினமும் பட்டிக்கு செல்லும் விவசாயிகள் ஆடு, மாடுகளை அவிழ்த்து விட்டு காடுகளில் மேச்சலுக்கு விடுகிறார்கள். பின்னர் மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக பட்டியல் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீரனூர் ஊராட்சி ராசிபாளையம், மண்ணாங்காடு பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தில் புகுந்த வெறி நாய்கள் கடித்தது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. மேலும் 3 ஆடுகள் நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும் என தெரிய வருகின்றது.
‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு