காங்கேயத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நல்லகுமார் (வயது 36). இவர், காங்கேயம் பகவதி பாளையத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். 

இவர் தங்குவதற்கு மில்லில் தனியாக அறை உள்ளது. அந்த அறையில் நேற்று முன்தினம் (ஜூலை 29) நல்லகுமார் மற்றும் அவரது நண்பர்கள் தூங்கினர். அப்போது அறைக்குள் புகுந்த 4 ஆசாமிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த 4 செல்போன்களை திருடி சென்றனர். இதனால் சத்தம் கேட்டு நல்லகுமார் மற்றும் அவரது நண்பர்கள் எழுந்து பார்த்தபோது 4 பேர் செல்போன்களை திருடிச் செல்வது தெரியவந்தது. 

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்திச் சென்றனர். அப்போது 2 பேர் பிடிபட்டனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 2 பேரும் காங்கேயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கரூரை சேர்ந்த அஜித்குமார் (33), நீலகிரியை சேர்ந்த அருண்குமார் (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிஓடிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி