இதில் படுகாயம் அடைந்த முருகேசன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முருகேசனை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக முருகேசன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
கூலித்தொழிலாளி முருகேசனை வெட்டிய உணவக பணியாளர் பூமிநாதன் தப்பி ஓடிவிட்டான். வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவகத்தில் சாப்பிட வந்தவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதுடன் ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் முத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.