திருப்பூர், ஈரோட்டில் 2 நாட்கள் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 4) மற்றும் நாளை(ஜூன் 5) ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி