தாராபுரம் அருகே தனியார் கல்லூரி அருகே நேற்று காரில் தோசை மாவு விற்பனைக்குச் சென்ற வெள்ளகோவில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தமிழ் (40) என்பவர், எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்ற காரின் ஓட்டுநர் மணிகண்டனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.