தாராபுரம்: பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

கோவை, திருப்பூர் பஸ்களில் இருந்து தாராபுரம் வழியாக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி, கரூர், கோவை, திருப்பூர், மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இதேபோல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முடித்துவிட்டு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோடை விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல தாராபுரம் பஸ் நிலையம் வந்து தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர். 

ஆனால் தாராபுரம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கும் செல்ல பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பஸ்களில் ஏற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். தாராபுரத்தில் இருந்து பஸ்கள் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி