தாராபுரம் விவேகம் ப்ரைம் சீனியர் செகண்டரி பள்ளியின் அஞ்சல் தலை திரட்டல் அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்கள் தபால் நிலையத்துக்கு களப்பயணம் சென்றனர். அங்கு அவர்கள் அரிய வகை அஞ்சல் தலை தொகுப்புகளை திரட்டினர். மேலும், சுய புகைப்படம் அஞ்சல் தலை வெளியிடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடிதம் எழுதுவதன் அவசியத்தை விளக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.