திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லைப் பகுதியான மறையூர் மற்றும் காந்தளூர் பகுதிகளில் நேற்று (மே 18) மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பல இடங்களில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.