தாராபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தாயுடன் வசித்து வந்தார். தாயின் இரண்டாவது கணவர் இறந்ததும், அவரது இரும்பு கடையை இருவரும் கவனித்து வந்தனர். இந்நிலையில், இரண்டாவது கணவரின் முதல் மனைவி கடையில் உரிமை கொண்டாடி பிரச்னை செய்துள்ளார். வழக்கறிஞர் சிவக்குமார் தலையிட்டு இளம்பெண்ணுக்கு சாதகமாக பேசி முடித்தார். பின்னர், பைக்கில் சென்றபோது, காட்டுப்பகுதியில் சிவக்குமார் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாராபுரம் போலீசார் சிவக்குமாரை தேடி வருகின்றனர்.