திருப்பதி கோயில் லட்டு பிரச்சனை.. இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தாராபுரம் காடு அனுமந்தராயர் கோயிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: - திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படுவது வருத்தத்துக்குரியது. திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது என்பது ஆந்திர முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களிலும் தரமற்ற பிரசாதம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பழனி உட்பட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களைத் தர சோதனை செய்ய வேண்டும், கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளார் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி