தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்தாரை, பெரிய காளியம்மன் கோவில் பகுதியில் தேர்தல் பரப்புரையை துவங்கினார். அப்போது
வீடு வீடாக சென்று அமமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எம். ஆர். ராஜேந்திரன், நகரச் செயலாளர் சிவராம், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் டி. டி. கே. காமராஜ், பாஜக நகரத் தலைவர் விநாயக சதீஷ், பாமக நகர செயலாளர் பிரவீன் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி வி. எம். சுப்பிரமணியம், சுஜித், ஆகியோர் சைக்கிள் சின்னத்திற்கு
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.