தாராபுரம்: சரக்கு ஆட்டோ மோதி விவசாயி பலி

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே சங்கபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (55) என்ற விவசாயி, குண்டடம் கால்நடை சந்தைக்கு வந்துவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனியார் எண்ணெய் ஆலை எதிரே சரக்கு ஆட்டோ மோதி உயிரிழந்தார். சாலையை மறைத்திருந்த வாகனங்களால் எதிரே வந்த வாகனம் தெளிவாகத் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடன் வந்தவர் உயிர் தப்பினார். குண்டடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி