திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கும் போது மாணவர் பிரேம்குமார் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, தீயணைப்புத் துறையினர் மாணவரின் உடலை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாராபுரம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.