திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட குட்டை திடல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காவல் நிலையம் போன்ற பகுதிகளில் சில நாட்களாக தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நாய்கள் சில சமயங்களில் வாகனங்களை துரத்தி வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.