திருப்பூரில் உள்ளிருப்பு போராட்டம்; உழவர் சந்தை விவசாயிகள் அறிவிப்பு

தாராபுரம் அண்ணா நகர் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு தினமும் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும் போது உழவர் சந்தையை சுற்றிலும் சில வியாபாரிகள் உழவர் சந்தை நேரத்திலேயே காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தை விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் விற்பனை செய்ய முடியாமல் தினமும் காய்கறிகள் தேக்கமடைந்து வருகிறது. இதனால் உழவர் சந்தை விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இன்று உழவர் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் உழவர் சந்தை விவசாயிகள் தங்களது வியாபாரங்களை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழவர் சந்தை சுற்றிலும் உள்ள காய்கறி கடைகளை அப்புறப்படுத்தும் வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக உழவர் சந்தை விவசாயிகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி