திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சுவாதி ஸ்ரீ, பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.