தாராபுரம், சகுனிபாளையம் ரோடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் சிவதருண், மே 4 இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார். மே 5 காலை அவர் மரத்தில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. சிறுவனின் தாய் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டார். தந்தையின் மதுப்பழக்கத்தால் பெரியப்பா வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.