அதன் பிற்காலத்தில் தென்கரை நாட்டின் பட்டக்காரர் வேணாவுடையார் வம்சவழியினரால் பராமரிக்கப்பட்டு பூஜைகளும் உற்சவங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பரம்பரை தர்மகர்த்தா ச.க. சேதுராஜேஸ்வரன் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. விழாவில், மணிப்பூர் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான வேணுகோபாலு - தேன்மொழி தம்பதியினர் வரவேற்றனர். மாவட்ட நீதிபதி சக்திவேல், தாராபுரம் மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி, புனிதம் அர்ஜுன், சுகன்யா சம்பத், ஸ்ரீ லட்சுமி அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.