உடுமலை பஸ் நிலையத்தில் காற்றில் பறந்த மேற்கூரை

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பழனி, மதுரை செல்லும் பேருந்துகளுக்காக பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை, சூறாவளி காற்றால் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் மீது விழாமல் பின்புறம் விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். மேற்கூரைகளை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி