தாராபுரம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி குறைபாடுகளைக் கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி