தாராபுரத்தில் அவினாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழி சாலைகள் அகலப்படுத்தப்பட்டு பணிகள் முடிந்த நிலையில், பல மாதங்களாக சாலையோரம் மண் குவியல்கள் தேங்கிக் கிடந்தன. தனியார் நிறுவனம் மற்றும் சாலை பராமரிப்பு ஊழியர்கள் அவ்வப்போது அவற்றை அகற்றி வந்தனர். நேற்று, தாராபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் பைபாஸ் சாலையில் தேங்கிக் கிடந்த மண் குவியல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.