திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கார்பன் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறாவது நாளாக தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொன்னாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வந்தனர். இது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே தாராபுரம் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பொன்னாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதின் பேரில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் காத்திருப்போராட்டம் தற்காலிகமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்தி வைத்தனர் இதனால் கார்பன் கம்பெனிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.